மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 19 பேர் கைது

நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 19 பேர் கைது
Published on

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று காலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் தலைமையில் மாநில குழு உறுப்பினர் பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுடலைராஜ், பெருமாள் மற்றும் பலர் நெல்லை வண்ணார்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப் தலைமையிலான போலீசார், 19 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். அவர்களை கைது செய்து போலீஸ் வேனில் அழைத்துச் செல்லும்போது போலீசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com