கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Aug 2023 11:30 PM GMT (Updated: 27 Aug 2023 11:30 PM GMT)

கோவையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்


கோவை


கோவை பெரிய கடைவீதி போலீசார் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் காந்திநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்றிருந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், செட்டிப்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த நவ்சாத் (39), காங்கயம்பாளையம் நேருநகரை சேர்ந்த ஜீவபாரதி (22) என்பதும், அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.Next Story