கஞ்சா விற்ற 2 பேர் கைது
மணல்மேடு அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 700கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
மயிலாடுதுறை
மணல்மேடு:
மணல்மேடு பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்திருப்பதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் போலீசார் அதன்படி ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி மணல்மேடு மின்வாரிய அலுவலகம் முன்பு, புத்தகரம் இடுகாட்டுப் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இந்த பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளந்தோப்பு பகுதியை பாரதிபாண்டியன் மகன் முகேஷ் (வயது 20), சிதம்பரம் தில்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் மனோஜ் (26) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தினர். மேலும் அவர்களிடம் இருந்து 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story