கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 31 May 2023 7:00 PM GMT (Updated: 31 May 2023 7:00 PM GMT)

கருமத்தம்பட்டி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

கருமத்தம்பட்டி

கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், தனிப்படை போலீசார் கருமத்தம்பட்டி-சோமனூர் அருகே ராமச்சியம்பாளையம் ரெயில்வே பாலம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த துக்கிரம் பாரிக் (வயது 40) மற்றும் சிரஞ்சிபி ரூட் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story