மணல் கடத்திய 2 சரக்கு வேன்கள் பறிமுதல்


மணல் கடத்திய 2 சரக்கு வேன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Dec 2022 12:17 AM IST (Updated: 22 Dec 2022 4:26 PM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்திய 2 சரக்கு வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி அக்னி ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக கறம்பக்குடி போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், ராமையா ஆகியோர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது 2 சரக்கு வேன்களில் மணல் கடத்தி வந்தவர்கள் போலீசாரை கண்டதும் சரக்கு வேன்களை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். இதையடுத்து அந்த 2 சரக்கு வேன்கள் மற்றும் 2 யூனிட் மணலை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story