மின்னல் தாக்கியதில் 2 பசு மாடுகள் பலி
மின்னல் தாக்கியதில் 2 பசு மாடுகள் பலியானது.
திருவண்ணாமலை
செய்யாறு
மின்னல் தாக்கியதில் 2 பசு மாடுகள் பலியானது.
செய்யாறு தாலுகா தென்எலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். விவசாயி. இவர் கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். அவற்றை இரும்பு தகர சீட்டுப் போட்ட கொட்டகையில் கட்டி வைத்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 2 பசுக்கள் சம்பவ இடத்திலேயே இறந்தன.
தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இது குறித்து செய்யாறு தாசில்தாருக்கு அறிக்கையாக அனுப்பி வைத்தார். மேலும் ஒ.ஜோதி பரிந்துரையின் பேரில், மின்னல் தாக்கி இறந்த இரு பசு மாடுகளுக்கு, வருவாய் துறை மூலம் உரிய நிவாரணம் வழங்கிட மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story