

திருவண்ணாமலை
நல்லவன்பாளையம், தானிப்பாடி பகுதிகளில் 2 நாட்கள் இன்றும் நாளையும் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
திருவண்ணாமலை மேற்கு கோட்டத்துக்குட்பட்ட துணை மின் நிலைய மின்பாதைகளில் இன்று (வியாழக்கிழமை), நாளை (வெள்ளிக்கிழமை) என 2 நாட்கள் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நல்லவன்பாளையம், சாவல்பூண்டி, பெருந்துறைப்பட்டு, பறையம்பட்டு, எடக்கல், அத்திபாடி, மேலந்தல், கண்டியாங்குப்பம், அத்தியவந்தல், அய்யம்பாளையம், காவேரியாம்பூண்டி, கணந்தம்பூண்டி, பண்டிதபட்டு, பெரும்பாக்கம், சேரந்தாங்கல், சே.அகரம், சம்மந்தனூர், தாழம்ஓடை, அரசம்பட்டு, வீரணம், தரடாப்பட்டு, கண்ணக்கந்தல், மலையனூர் செக்கடி, ரெட்டிபாளையம், மேல்பாச்சார், கீழ்பாச்சார், அல்லப்பனூர், கிருஷ்ணாபுரம், கொழுந்தம்பட்டு ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இதேபோல் நாளை நல்லவன்பாளையம், மேல்செட்டிப்பட்டு, மேல்சிறுபாக்கம், கீழ் சிறுபாக்கம், கலர்பாளையம், சு.பள்ளிப்பட்டு, மலப்பாம்பாடி, அய்யம்பாளையம், சின்னபாலிபட்டு, அசுவநாகசுரணை, ராயண்டபுரம், பி.குயிலம், விஜயப்பனூர், புதூர்செக்கடி, திருவடத்தனூர், தானிப்பாடி, நறிஞ்சிப்பாடி, நாராயணகுப்பம், சே.ஆண்டாப்பட்டு, டி.வேளூர், மோட்டூர், வேப்பூர்செக்கடி, பக்கிரிபாளையம், மலையனூர் செக்கடி, டி.ஏ.குப்பம் ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என செயற்பொறியாளர் ராஜஸ்ரீ தெரிவித்துள்ளார்.