போதிய பயணிகள் இல்லாததால் 2 டெல்லி விமானங்கள் ரத்து

2 விமானங்களில் பயணம் செய்ய போதுமான பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
போதிய பயணிகள் இல்லாததால் 2 டெல்லி விமானங்கள் ரத்து
Published on

சென்னை,

டெல்லியில் இருந்து இன்று காலை 7.50 மணிக்கு புறப்பட்டு காலை 10.45 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வர வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், அதேபோல் காலை 11.25 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 2.20 மணிக்கு டெல்லிக்கு சென்றடைய வேண்டிய விஸ்வரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டன.

மேலும் இந்த விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வேறு விமானங்களுக்கு டிக்கெட்டுகள் மாற்றப்பட்டன.

இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'போதிய பயணிகள் இல்லாததால் நிர்வாக காரணங்களுக்காக இந்த 2 விமான சேவைகளும், இன்று ரத்து செய்யப்பட்டது. பயணிகளுக்கு தேவையான மாற்று ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தனர். போதுமான பயணிகள் இல்லாததால் இவ்வாறு விமானங்கள் ரத்து செய்யப்படுவது ஒன்றும் முதல்முறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com