மோட்டார்சைக்கிள் விபத்தில் 2 பேர் படுகாயம்

தேனி அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
மோட்டார்சைக்கிள் விபத்தில் 2 பேர் படுகாயம்
Published on

தேனி அருகே உள்ள கெண்டிக்காரன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் குமார் (வயது 27). தனியார் பஸ் கண்டக்டர். நேற்று முன்தினம் இவர், தேனி-பெரியகுளம் சாலையில் மதுராபுரி மின்வாரிய துணை மின் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது.

இதில் மோகன் குமார் மற்றும் மோட்டார்சைக்கிளில் வந்த சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த சீனிவாசன் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com