பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது
விழுப்புரத்தில் பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்
விழுப்புரம் வழுதரெட்டி பகுதியில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்தபோது 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். 2 பேர் மட்டும் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த செந்தில்நாதன் (வயது 38), வழுதரெட்டி கணேசன் (45) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story