பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது
Published on

போடி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போடி தாலுகா போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வினோபாஜி காலனி அருகே 2 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த வைரவன் (வயது 54), திருமலாபுரத்தைச் சேர்ந்த வேல்முருகன் (52) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 52 சீட்டுகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com