தாமிர ஒயர் திருடிய 2 பேர் கைது


தாமிர ஒயர் திருடிய 2 பேர் கைது
x

நெல்லை அருகே தாமிர ஒயர் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 30). இவர் கொத்தன்குளம் பகுதியில் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் நேற்று முன்தினம் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தாமிர ஒயரை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து நம்பிராஜன் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப- இன்ஸ்பெக்டர் துரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கோபாலசமுத்திரம் நடுத்தெருவைச் சேர்ந்த பெருமாள் (28), முத்துக்குமார் (22) ஆகியோரை கைது செய்தார்.

1 More update

Next Story