வெவ்வேறு விபத்துகளில் காயமடைந்த முதியவர் உள்பட 2 பேர் சாவு

நெல்லையில் வெவ்வேறு விபத்துகளில் காயமடைந்த முதியவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெவ்வேறு விபத்துகளில் காயமடைந்த முதியவர் உள்பட 2 பேர் சாவு
Published on

நெல்லையில் வெவ்வேறு விபத்துகளில் காயமடைந்த முதியவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மோட்டார் சைக்கிள் மோதல்

பாளையங்கோட்டை சமாதானபுரம் எம்.கே.பி.நகர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் மில்டன் (வயது 72). இவர் சம்பவத்தன்று நெல்லை- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அங்குள்ள ஆஸ்பத்திரி முன்பு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் மில்டன் படுகாயம் அடைந்தார்.

உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் அவர் பரிதாபமாக இறந்தார்.

மற்றொரு சம்பவம்

இதேபோன்று அம்பை சாட்டுப்பத்து பவுண்டு தெருவைச் சேர்ந்த சண்முகவேல் (50) என்பவர் சம்பவத்தன்று நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காங்கிரீட் கலவை எந்திரம் ஏற்றிச் சென்ற வாகனம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த சண்முகவேலை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவங்கள் குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com