அரிவாளுடன் வீடியோ பதிவிட்ட வாலிபர் உள்பட 2 பேர் கைது
அரிவாளுடன் வீடியோ பதிவிட்ட வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள தேனீர்குளத்தை சேர்ந்தவர் தனுஷ்கோடி (வயது 22). இவரும், டவுன் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் வீடியோ எடுத்து வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். 17 வயது சிறுவன் காப்பகத்தில் அடைக்கப்பட்டான்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire