கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை


கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
x

கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

புதுக்கோட்டை

கொலை மிரட்டல்

அரிமளத்தை சேர்ந்தவர்கள் பாண்டியராஜன் (வயது 35), கருப்பையா (30). இவர்கள் மிரட்டுநிலையை சேர்ந்த பழனிசாமி மற்றும் அவரது அண்ணன் மற்றொரு கருப்பையா (45) ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் ஸ்கூரு டிரைவரால் கருப்பையா வயிற்றில் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜன், கருப்பையா ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

7 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயக்குமார் ஜெமிரத்னா நேற்று தீர்ப்பளித்தார். இதில் வெவ்வேறு பிரிவுகளில் பாண்டியராஜனுக்கு 3 மாதங்கள், 3 ஆண்டுகள், 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், கருப்பையாவுக்கு வெவ்வேறு பிரிவுகளில் 3 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதன்படி 2 பேரும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க உள்ளனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அல்போன்ஸ் ஆஜராகி வாதாடினார்.


Next Story