தூத்துக்குடியில் முன்விரோதத்தில்வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய 2 பேர் கைது
தூத்துக்குடியில் முன்விரோதத்தில்வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் முன்விரோதத்தில் மண்ணெண்ணெய் குண்டு வீசி தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்விரோதம்
தூத்துக்குடி முனியசாமிபுரம் லோகியா நகரை சேர்ந்தவர் குருசாமி. இவருடைய மகன் வடமுத்து என்ற முத்துகுமார் (வயது 34) மற்றும் மூக்கையா மகன் சுரேஷ் (25) ஆகியோருக்கும், தூத்துக்குடி முனியசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தையா மகன் சதீஷ்குமார் (34) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து உள்ளது. இதனால் அவர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சதீஷ்குமார், அவரது நண்பரான தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சுரேஷ்குமார் (22) என்பவருடன் சேர்ந்து வடமுத்து என்ற முத்துக்குமர் வீட்டுக்கு வந்து உள்ளனர். அங்கு பாட்டிலில் மண்ணெண்ணெய் நிரப்பி, தீவைத்து வீட்டின் மீது வீசி உள்ளனர். இதல் பாட்டில் வெடித்து தீப்பற்றி எரிந்து உள்ளது. இதில் வீட்டின் முன்பு இருந்த விளக்கு சேதம் அடைந்தது.
கைது
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து, சதீஷ்குமார், சுரேஷ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் மீது ஏற்கனவே 9 வழக்குகளும், சுரேஷ்குமார் மீது 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.