சொகுசு காருடன் 200 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்


சொகுசு காருடன் 200 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 July 2023 7:27 PM IST (Updated: 6 July 2023 5:54 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காட்டில் 200 கிலோ புகையிலை பொருள், சொகுசு காருடன் பறிமுதல் செய்யப்பட்டது. கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

புகையிலை பொருள் கடத்தல்

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆற்காடு பைபாஸ் சாலையில் தனியார் கல்லூரி அருகே பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புகையில பொருளான ஹான்ஸ் பாக்கெட்டுகள் சுமார் 200 கிலோ இருந்தது தெரியவந்தது.

காருடன் பறிமுதல்

விசாரணையில் ஹான்ஸ் பாக்கெட்டுகளை கடத்தி வந்தது ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் பகுதியை சேர்ந்த விக்ரம் சிங் (வயது 26) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் கடத்தி வந்த 200 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் எனக் கூறப்படுகிறது.

1 More update

Next Story