மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலர், சுகாதாரத் துறை செயலர் ஆலோசனை + "||" + Corona prevention work: General Secretary, Health Secretary consultation with DMK President MK Stalin

கொரோனா தடுப்பு பணிகள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலர், சுகாதாரத் துறை செயலர் ஆலோசனை

கொரோனா தடுப்பு பணிகள்:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலர், சுகாதாரத் துறை செயலர் ஆலோசனை
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்.
சென்னை

தமிழகத்தில் கொரோனா பரவலின் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 153 ஆக உயர்ந்துள்ளது.

இதை கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே ஆலோசனைகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகநாதன் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள், திமுக தலைவர் ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்க எத்தகைய கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம் என ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆலோசனைக்குப் பிறகு புறப்பட்டுச் சென்ற, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், கொரோனா தொடர்பாகவே ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. மத்திய பிரதேசத்தில் 6 டெல்டா பிளஸ் தொற்று- 56 ஆல்பா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன
மத்தியப் பிரதேசத்தில் 1,219 மாதிரிகளில் 318 டெல்டா தொற்று பாதிப்புகளில் ஆறு டெல்டா பிளஸ் தொற்று மற்றும் 56 ஆல்பா பாதிப்புடனும் கண்டறியப்பட்டு உள்ளது.
2. வருகிறது சூப்பர் வேக்சின்...! எல்லா வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு
எல்லா வகையான கொரோனா வைரஸ்களையும் எதிர்க்கும் சூப்பர் வேக்சினை அமெரிக்க ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
3. சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு மண்டல வாரியாக விவரம்
சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து. மண்டல வாரியாக விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
4. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு சிறை பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட விரும்பாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
5. குழந்தையை சுமந்து கொண்டு 40 கிலோமீட்டர் காடு, ஆறுகளை கடந்து கிராம மக்களுக்கு தடுப்பூசி போடும் பெண்
ஒப்பந்த முறையில் பணியில் இருக்கும் மந்தி குமாரி 40 கிலோமீட்டர் காடு, ஆறுகளை கடந்து சென்று கிராம மக்களுக்கு தடுப்பூசி போடுகிறார்.