மாநில செய்திகள்

புதுச்சேரியில் துணை முதல்-அமைச்சர் பதவி ஏற்படுத்தப்படுமா? ரங்கசாமி பதில் + "||" + Will there be a Deputy First Minister post in Pondicherry? Rangasamy replied

புதுச்சேரியில் துணை முதல்-அமைச்சர் பதவி ஏற்படுத்தப்படுமா? ரங்கசாமி பதில்

புதுச்சேரியில் துணை முதல்-அமைச்சர் பதவி ஏற்படுத்தப்படுமா? ரங்கசாமி பதில்
புதுச்சேரியில் துணை முதல்-அமைச்சர் பதவி ஏற்படுத்தப்படுமா? ரங்கசாமி பதில்.
சேலம், 

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இந்தநிலையில் ரங்கசாமி சேலத்தில் உள்ள அப்பாபைத்தியசாமி கோவிலில் நேற்று அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார். அப்போது ரங்கசாமி வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும், அமைச்சர் பட்டியலையும் வைத்து சாமி தரிசனம் செய்தார்.

இதைத்தொடர்ந்து ரங்கசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம் வருமாறு:-

கேள்வி: புதுவையில் முதல்-அமைச்சராக பதவி ஏற்பு விழா எப்போது?

பதில்: 7-ந் தேதி (நாளை) பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.

கேள்வி: பா.ஜனதா கட்சி சார்பில் 3 அமைச்சர் பதவி கேட்பதாக கூறப்படுகிறதே?

பதில்: அது மாதிரி எதுவும் இ்ல்லை.

கேள்வி: துணை முதல்-அமைச்சர் பதவி ஏற்படுத்தப்படுமா?

பதில்: புதுவையில் இதுவரை அப்படி இல்லை. மத்திய அரசு கூறினால் பரிசீலிப்போம். தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் பணிகள் நடைபெறவில்லை கனிமொழிக்கு மத்திய மந்திரி பதில்
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் பணிகள் நடைபெறவில்லை கனிமொழிக்கு மத்திய மந்திரி பதில்.
2. பாண்லே உற்பத்தித் திறனை 20 ஆயிரம் லிட்டராக உயர்த்த ஒப்பந்தம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்து
பாண்லே உற்பத்தித் திறனை 20 ஆயிரம் லிட்டராக உயர்த்த ஒப்பந்தம்: முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
3. தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள்: பொதுத்தேர்வுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றுவருவதால் பொதுத்தேர்வுக்கு பாடத்திட்டங்களை குறைக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
4. கொரோனா 2ம் அலை: ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு இல்லை; மத்திய அரசு பதில்
நாட்டில் கொரோனா 2ம் அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
5. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் 40 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்'பாகுபலி'-பிரதமர் மோடி
கொரோனா காலத்தில் தேவையான விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி அளித்த பேட்டியில் தெரிவித்தார்.