ஊரடங்கு நீட்டிக்கப்படுமா...? மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை

ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார்.
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா...? மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை
Published on

சென்னை

ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சி குழுவுடன் மே 22-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் காலை 11.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் உள்பட 13 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

கூட்டத்தில் கொரோனா பரவல், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது உள்ளிட்டவை தொடர்பாக எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-அமைச்சர் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய 13 பேர் கொண்ட குழு கடந்த வாரம் அமைக்கப்பட்டது.

சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு, அவர்களிடமிருந்து பெறப்படும் பரிந்துரையின் அடிப்படையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com