மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வா? நீட்டிப்பா? முதல்-அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை + "||" + Is curfew will be extend in Tamil Nadu? chief Minister mk stalin will hold discussion with experts today

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வா? நீட்டிப்பா? முதல்-அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வா? நீட்டிப்பா? முதல்-அமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை
தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு வரும் 7 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
சென்னை,

கொரோனா பரவலை தடுக்க பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே  10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராததையடுத்து கடந்த மே  24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

தொற்று பரவல் கட்டுக்குள் வராததையடுத்து, மீண்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு ஒருவாரம் நீட்டிக்கப்பட்டது. அதாவது ஜூன் 7 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிய இன்னும் சில தினங்களே உள்ளதால், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுக்க முதல் - அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.  

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.  

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு மற்றும் அரசு மேற்கொண்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் வேகம் குறைந்து படிப்படியாக குறையத்தொடங்கியுள்ளது. இதனால், ஊரடங்கு தளர்வுகள் இன்றி நீட்டிக்கப்படுமா? அல்லது சில தளர்வுகள் அளிக்கப்படுமா? என்பது குறித்து மக்கள் மத்தியில்  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கும்மிடிப்பூண்டியில் குளத்தில் மூழ்கி இறந்த ஐவரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
கும்மிடிப்பூண்டியில் குளத்தில் மூழ்கி இறந்த ஐவரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
2. போலீசார் தாக்கியதால் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி
சேலத்தில் போலீசார் தாக்கியதால் உயிரிழந்த முருகேசன் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
3. தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன? முழு விவரம்
தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் வரும் 14-ம் தேதி முதல் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து, தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
4. கொரோனா தடுப்பு பணிகளில் கோவை மட்டுமின்றி எந்த ஊரும் புறக்கணிக்கப்படவில்லை- மு.க ஸ்டாலின்
கொரோனா தடுப்பு பணிகளில் கோவை மட்டுமின்றி எந்த ஊரும் புறக்கணிக்கப்படவில்லை என முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
5. தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பது குறித்து ஆலோசனை: மு.க. ஸ்டாலின்
தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா பாதித்தாலும் பெரிய அளவில் பிரச்சினை இருக்காது என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.