மாநில செய்திகள்

அரசு கேபிள் டி.வி.யில் புதிதாக 30 சேனல்கள் - கேபிள் டி.வி. நிறுவன தலைவர் தகவல் + "||" + 30 new channels on Government Cable TV

அரசு கேபிள் டி.வி.யில் புதிதாக 30 சேனல்கள் - கேபிள் டி.வி. நிறுவன தலைவர் தகவல்

அரசு கேபிள் டி.வி.யில் புதிதாக 30 சேனல்கள் - கேபிள் டி.வி. நிறுவன தலைவர் தகவல்
அரசு கேபிள் டி.வி.யில் புதிதாக 30 சேனல்கள் இணைக்கப்பட்டுள்ளதாக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு,

அரசு கேபில் டி.வி. நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு கேபிள் டி.வி.யில் புதிதாக 30 சேனல்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய சேனல்கள் இணைக்கப்பட்டாலும், பழைய கட்டணத்திலேயே சேவைகள் தொடரும் என தெரிவித்தார். 

அத்துடன் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 23 ஆயிரம் செட்-டாப் பாக்ஸ்கள் பயன்பாட்டில் இல்லை என குறிப்பிட்ட அவர், பயன்பாட்டில் இல்லாத செட்-டாப் பாக்ஸ்கள் மீது ஆப்பரேட்டகளுக்கும், அதிகாரிகளுக்குமே பொறுப்பு என்று தெரிவித்தார். 

எனவே செட்-டாப் பாக்ஸ்களை திரும்ப பெற்று ஒப்படைக்கவில்லை என்றால், உரிய கட்டண விலை வசூலிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். அதே போல சில ஆப்பரேட்டர்கள் தனியார் செட்-டாப் பாக்ஸ்களை விற்பதாக புகார் வந்துள்ளதாகவும், கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கடந்த ஆட்சியின் தவறான கொள்கையால் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு ரூ.400 கோடி இழப்பு- ஈரோட்டில் குறிஞ்சி சிவக்குமார் பேட்டி
கடந்த ஆட்சியின் தவறான கொள்கையால் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அரசு கேபிள் டி.வி. தலைவர் குறிஞ்சி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.