

சென்னை,
10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைமையிலான அரசு சார்பில் 2021-22ஆம் நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய பட்ஜெட் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். முதல்முறையாக இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கூறியதாவது:-
தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்கிற மகத்தான பயணத்திற்கு வித்திட்டுள்ள பட்ஜெட் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
பொற்கால ஆட்சிக்கான திறவுகோலாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தமிழ்நாடு தலைநிமிர்ந்து நடைபோட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்- முத்தரசன்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் வளர்சிக்கும், மாநில மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் பட்ஜெட் - வேல்முருகன்
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத பற்றாக்குறை நிறைந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது - ஜி.கே.வாசன்
மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது - மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.
எதிர்பார்த்ததைப்போலவே தமிழக பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டங்கள் இல்லை. வழக்கம்போல் நமது மத்திய அரசுக்கு பட்ஜெட்டில் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வருவதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மறந்துபோன பட்ஜெட் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகியவை கலந்த கலவையாக உள்ளது. தமிழக அரசு எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிகளை புரிந்து கொள்ள முடிகிறது. இதே நிலை நீடித்தால் அதை மக்களால் தாங்க முடியாது - பாமக நிறுவனர் ராமதாஸ்.