தமிழக மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி; அமைச்சர் பேட்டி


தமிழக மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி; அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 17 Oct 2021 12:04 PM GMT (Updated: 17 Oct 2021 12:04 PM GMT)

தமிழக மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதனால், தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.  இதனை தொடர்ந்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த மாதம் 1ந்தேதி முதல் 9-12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.  இதன் தொடர்ச்சியாக, வருகிற நவம்பர் 1ந்தேதி முதல் 1-8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.  அதன்பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் திறன் குறைவாக உள்ளது.  இதனால், பள்ளி நேரத்திற்கு பின் ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Next Story