மாநில செய்திகள்

கண்ணை மறைத்த கள்ளக்காதல்: 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம்பிடித்த 40 வயது பெண் + "||" + False love blindfolded: 40-year-old girl running with college student

கண்ணை மறைத்த கள்ளக்காதல்: 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம்பிடித்த 40 வயது பெண்

கண்ணை மறைத்த கள்ளக்காதல்: 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம்பிடித்த 40 வயது பெண்
பெரியநாயக்கன்பாளையத்தில் கள்ளக்காதல் கண்ணை மறைத்ததால் 40 வயது பெண், கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
இடிகரை,

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு திருமணம் முடிந்து, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவருடைய கணவர் கூலி தொழிலாளியாக உள்ளார். இந்த நிலையில் 40 வயது பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து செல்போனில் பேசி வந்தனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் வேலைக்கு சென்றதும், அந்த பெண் கல்லூரி மாணவரை வீட்டிற்கு அழைத்து அவருடன் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மூலமாக கணவருக்கு தெரியவந்தது. இதையடுத்து தனது மனைவியை கண்டித்துள்ளார். மேலும் கள்ளக்காதலை கைவிடுமாறு அறிவுரை கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் தொடர்ந்து கல்லூரி மாணவருடன் உல்லாசமாக இருந்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் 40 வயது பெண் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். இதேபோல கல்லூரி மாணவரும் மாயமானது தெரியவந்தது. விசாரித்ததில், கள்ளக்காதல் கண்ணை மறைத்ததால் 40 வயது பெண், கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் கணவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவனுடன் ஓட்டம் பிடித்த 40 வயது பெண்ணை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கழுத்தை அறுத்து கொலை
தேன்கனிக்கோட்டை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். தற்கொலை நாடகமாடிய மனைவியையும், இவரது கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
2. மனைவியின் கள்ளக்காதலனை வெட்டி கொன்ற தொழிலாளி கைது
இரணியல் அருகே மனைவியின் கள்ளக்காதலனை வெட்டி கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.
3. கள்ளக்காதல் விவகாரத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் வெட்டிக்கொலை
கள்ளக்காதல் விவகாரத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதலை கைவிடாத மனைவிக்கும் வெட்டு விழுந்தது.