சுற்றுலா தளங்களை இணைக்கும் வகையில் திருச்சி மெட்ரோ ரெயில் சேவை - அமைச்சர் கே.என்.நேரு

சுற்றுலா தளங்களை இணைக்கும் வகையில் திருச்சி, வயலூர், ஸ்ரீரங்கம், சமயபுரம் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை அமைக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
சுற்றுலா தளங்களை இணைக்கும் வகையில் திருச்சி மெட்ரோ ரெயில் சேவை - அமைச்சர் கே.என்.நேரு
Published on

திருச்சி,

திருச்சி தில்லைநகரில் இன்று நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது,

கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் குறித்து ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திருச்சி, நெல்லை, சேலம் ஆகிய மாநகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் குறித்து ஆய்வு நடத்தும் நிறுவனத்தை தேர்ந்து எடுக்க மெட்ரே ரெயில் நிறுவனம் டெண்டர் விட்டுள்ளது.

சுற்றுலா தளங்களை இணைக்கும் வகையில் திருச்சி மலைக்கோட்டை - வயலூர் - ஸ்ரீரங்கம் - சமயபுரம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களை இணைத்து மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை கொண்டு வருவதற்கு நாங்கள் எடுத்துக்கூற உள்ளோம் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com