டைல்ஸ் கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

டைல்ஸ் கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
டைல்ஸ் கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராக்கேஷ். இவர் கோட்டார் பகுதியில் உள்ள ஒரு டைல்ஸ் கடையில் ரூ.31,752 செலுத்தி டைல்ஸ் வாங்கியுள்ளார். வாங்கிய 4 மாதங்களிலேயே அந்த டைல்ஸின் பகுதியில் ஓட்டைகள் ஏற்பட்டு உபயோகிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடைக்காரரை தொடர்பு கொண்டு டைல்ஸ்களை மாற்றித் தருமாறு ராக்கேஷ் கேட்டுள்ளார். ஆனால் கடைக்காரர் மாற்றித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பின்னர் அவர் உடனடியாக வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான ராக்கேஷ் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் ஆகியோர் நேற்று தீர்ப்பு கூறினர். தீர்ப்பில், டைல்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடு ரூ.25 ஆயிரம் மற்றும் டைல்ஸ்க்கு வழங்க செலுத்திய ரூ.31,752-ஐ வழங்க வேண்டும். மேலும் வழக்கு தொகை ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com