மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் 26 ஜோடிகளுக்கு திருமணம்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் 26 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இந்த ஜோடிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
மன்னார்குடி:
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் 26 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இந்த ஜோடிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
26 ஜோடிகளுக்கு திருமணம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் திருமணங்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அந்தந்த கோவில் வாயிலாக இலவசமாக நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி அவ்வப்போது இலவச திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர், நாகை மாவட்டங்களில் பதிவு செய்து இருந்த 26 ஜோடிகளுக்கு நேற்று மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் திருமணம் நடந்தது.
ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை
விழாவுக்கு நாகை மண்டல இணை ஆணையர் குமரேசன் தலைமை தாங்கி 26 ஜோடிகளுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் அறநிலையத்துறை துணை ஆணையர் ராமு, நாகை உதவி ஆணையர் ராணி, மன்னார்குடி நகரசபை தலைவர் மன்னை. சோழராஜன், நகர சபை துணைத் தலைவர் கைலாசம், ராஜகோபாலசாமி கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராஜகோபாலசாமி கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த திருமணத்தில் மணமக்களின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர் 26 திருமண ஜோடிகளுக்கு பீரோ, கட்டில் என ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் அறநிலையத்துறை சார்பில் வழங்கப்பட்டது.