பெண் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பெண் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

அரக்கோணம் அருகே நடந்த 2 கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட பெண் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ராணிப்பேட்டை

அரக்கோணம் அருகே நடந்த 2 கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட பெண் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கொலை வழக்கில் கைது

அரக்கோணம் காவனூர் ரோடு தோல் ஷாப் பகுதியை சேர்ந்தவர் மனோ (வயது 22). இவரது மனைவி அம்சா நந்தினி (18). இவர்களது 40 நாட்களே ஆன ஆண் குழந்தையை, உறவினரான தேன்மொழி, சொத்துக்காக வாளி தண்ணீரில் அமுக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேன்மொழியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோன்று காஞ்சீபுரத்தை அடுத்த புஞ்சை அரசந்தாங்கல் பகுதியை சேர்ந்த மாணிக்கம் (52), இவரது மனைவி ராணி (47) ஆகியோர் கொலை ஏரிப்பகுதியில் கொலைசெய்யப்பட்டு கிடந்தனர். இந்த வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த தரணி (25) மற்றும் சந்திரன் (40) ஆகியோரை அரக்கோணம் தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இந்தநிலையில் தேன்மொழி, தரணி, சந்திரன் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ராணிபேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் தேன்மொழி, தரணி, சந்திரன் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் சிறையில்உள்ள 3 பேருக்கும் வழங்கப்பட்டது.


Next Story