பிளஸ்-1 மாணவர் உள்பட 3 பேர் கைது


பிளஸ்-1 மாணவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 5:03 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் பிளஸ்-1 மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை

சிவகங்கை

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் பிளஸ்-1 மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெட்டிக்கொலை

சிவகங்கை காமராஜர் காலனி பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி (வயது 31). இவருடைய மனைவி கவுசல்யா என்ற கீதா (26). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பின்னர் தங்கபாண்டி சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். கடந்த 1½ மாதத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி இரவு 9 மணி அளவில் தங்கபாண்டி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதைத் தொடர்ந்து அவரை பல இடங்களிலும் தேடினார்கள்.

இந்த நிலையில் மறுநாள் அதிகாலையில் அந்த பகுதியில் ஒரு இடத்தில் பலத்த வெட்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தங்கபாண்டி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை தொடர்ந்து அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

3 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பிரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வாய் தகராறில் அவரை சிலர் வெட்டி கொன்றது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி சிவகங்கையை அடுத்த கொட்டகுடியைச் சேர்ந்த பொக்லைன் டிரைவர் விஜயகுமார் (19), மானாமதுரை வேலூரை அடுத்த சீரம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (25) மற்றும் சிவகங்கை பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் 16 வயது மாணவர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story