சப்-கலெக்டர் உள்பட 3 பேர் காயம்


சப்-கலெக்டர் உள்பட 3 பேர் காயம்
x

வடலூரில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த சப்-கலெக்டர் உள்பட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர்

வடலூர்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சப்-கலெக்டராக (பொறுப்பு) பணியாற்றி வருபவர் லூர்துசாமி. நேற்று மாலை அலுவலக பணி காரணமாக விருத்தாசலத்தில் இருந்து சப்-கலெக்டர் லூர்துசாமி, அலுவலக உதவியாளர் கர்ணன் ஆகியோர் அரசு காரில் கடலூருக்கு புறப்பட்டு சென்றனர். காரை டிரைவர் வீரவேல் ஓட்டினார். வடலூர் சிப்காட் அருகே சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது. அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பியதாக தெரிகிறது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

மருத்துவமனையில் சிகிச்சை

இந்த விபத்தில் சப்-கலெக்டர் லூர்துசாமி, டிரைவர் வீரவேல், அலுவலக உதவியாளர் கர்ணன் ஆகிய 3 பேரும் காயமடைந்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சப்-கலெக்டர் லூர்துசாமி உள்பட 3 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து வடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story