3 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை


3 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
x

நகைக்கடையில் 8 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அம்பை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருநெல்வேலி

அம்பை:

நகைக்கடையில் 8 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அம்பை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

நகைக்கடையில் கொள்ளை

நெல்லை மாவட்டம் அம்பை மெயின் ரோட்டில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த 2016-ம் ஆண்டு லாக்கரை உடைத்து சுமார் 8.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் யாசின் மவுலானா கொடுத்த புகாரின் பேரில் அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் கடையில் வேலை பார்த்த மேலச்செவலை சேர்ந்த முகமது சேட் சம்சுதீன் (வயது 31) மற்றும் அவரது நண்பர்களான அதே பகுதியில் வசிக்கும் நைனா முகமது மகன் முகமது காதர் இப்ராகிம் (27), அல்லா பிச்சை மகன் நாகூர் மீரான் (38), மேலும் பத்தமடையை சேர்ந்த பிச்சை முகைதீன் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 5 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

சிறை தண்டனை

இந்த வழக்கு அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே வழக்கில் தொடர்புடைய சிறுவன் இறந்து போன நிலையில், பத்தமடையை சார்ந்த பிச்சை முகைதீன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. குற்றவியல் நடுவர் பல்கலைச்செல்வன் விசாரித்து, முகமது சேட் சம்சுதீன், முகமது காதர் இப்ராகிம் ஆகிய 2 பேருக்கும் தலா ரூ.15 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும், நாகூர் மீரானுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.


Next Story