வேன் கவிழ்ந்து 30 தொழிலாளர்கள் காயம்
காரியாபட்டி அருகே வேன் கவிழ்ந்து 30 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே வேன் கவிழ்ந்து 30 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.
வேன் கவிழ்ந்தது
நரிக்குடி மற்றும் அ.முக்குளம் பகுதியிலிருந்து மதுரை மாவட்டம் வலையங்குளம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலைக்கு தினமும் எண்ணற்ற பேர் வேலைக்கு செல்கின்றனர். வழக்கம் போல் நேற்று காலை தொழிலாளர்கள் 30 பேர் வேனில் வேலைக்கு சென்றனர்.
இந்தநிலையில் காரியாபட்டி அருகே மீனாட்சிபுரம் என்ற இடத்தில் வேன் சென்று கொண்டு இருந்தது.
அப்போது அந்த பகுதியில் மழை பெய்து சாலை சற்று ஈரமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
30 பேர் காயம்
காயமடைந்த 30 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் அவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.