ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களுக்கு இந்திய கடற்படை சார்பில் 3.2 டன் நிவாரண பொருட்கள்


ஸ்ரீவைகுண்டம் பகுதி மக்களுக்கு இந்திய கடற்படை சார்பில் 3.2 டன் நிவாரண பொருட்கள்
x

நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

சென்னை,

நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அந்த வகையில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள மக்களுக்கு 3.2 டன் நிவாரண பொருட்கள் இந்திய கடற்படை சார்பில் நேற்று வழங்கப்பட்டது.

ஹெலிகாப்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிவாரண பொருட்களை பொதுமக்கள் லாவகமாக பிடித்தனர்.

அந்த கிராமத்தில் அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட முதியோரையும், கர்ப்பிணி பெண்ணையும் 'ஹெலிகாப்டர்' மூலம் இந்திய கடற்படை வீரர்கள் நேற்று மீட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story