வேனில் கடத்திய 34 மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல்
வேனில் கடத்திய 34 மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்ட எல்லையான அழகாபுரியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்த ஒரு வேனை சோதனை செய்தனர். அதில் 34 மூடைகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். இதையடுத்து வேனில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சேலம் மேலகரையை சேர்ந்த கண்ணன் (வயது 24) என்பதும் புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. வேனையும், புகையிலைப்பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். போலீசார் வேனை மறித்ததும் அங்கிருந்து தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.