முஸ்லிமாக மாறுவோருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு


முஸ்லிமாக மாறுவோருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 11 March 2024 9:37 PM GMT (Updated: 12 March 2024 2:02 AM GMT)

அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சாதி சான்றிதழ் வழங்கும் அலுவலர்கள் இந்த அரசாணைப்படி செயல்பட உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை,

ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இஸ்லாத்தை தழுவினால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவது இல்லை என்றும், இவர்களுக்கும் முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா சட்டசபையில் பேசினார்.

இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இஸ்லாத்தை தழுவும் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இஸ்லாத்தை தழுவினால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அரசாணையில், 'அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சாதி சான்றிதழ் வழங்கும் அலுவலர்கள் இந்த அரசாணைப்படி செயல்பட உரிய அறிவுறுத்தல்களை வருவாய் நிர்வாக ஆணையர் வழங்க வேண்டும்' என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story