சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 36 வழக்குகளுக்கு தீர்வு


சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 36 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 11 July 2023 2:30 AM IST (Updated: 11 July 2023 4:50 PM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டையில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 36 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2¾ கோடி வசூல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 36 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2¾ கோடி வசூல் செய்யப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

பட்டுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடந்தது. நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி மணி, வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், நீதித்துறை நடுவர் சத்யா, மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் அழகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு மக்கள் நீதிமன்றம் 2 அமர்வாக பிரிக்கப்பட்டு அதில் 140 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 36 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

ரூ.2¾ கோடி வசூல்

மேலும் ரூ.2 கோடியே 83 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. .நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது. இதில் பட்டுக்கோட்டை வக்கீல் சங்கத் தலைவர் மாஸ்கோ, வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மக்கள் நீதிமன்ற ஏற்பாடுகளை பட்டுக்கோட்டை வட்ட சட்டப் பணிகள் குழு இளநிலை நிர்வாக உதவியாளர் பிரசன்னா, சட்ட பணியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story