4 கூரை வீடுகள் எரிந்து சேதம்


4 கூரை வீடுகள் எரிந்து சேதம்
x

திட்டக்குடி அருகே தீ விபத்தில் 4 கூரை வீடுகள் எரிந்து சேதமானது.

கடலூர்

ராமநத்தம்,

திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தை சேர்ந்தவர் ராயர்ஆதி மகன் ராஜவேல் (வயது 29). இவரது கூரை வீட்டில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ, அருகே இருந்த ராஜவேலின் அண்ணண்களான கட்டிமுத்து(31), சக்திவேல் மற்றும் வீராசாமி மனைவி அஞ்சலை (65) ஆகியோரின் வீடுகளிலும் தீ பற்றி எரிந்தது.

இதுபற்றி அறிந்த திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுதண்ணீர பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 4 கூரை வீடுகளும் எரிந்த சாம்பலானது. இதன் சேதமதிப்பு ரூ.5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்றும், தீ விபத்து மின்கசிவின் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா விபத்து நடந்த இடத்துக்கு சென்று, பார்வையிட்டு விசாரித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story