இளையான்குடி அருகே 41 மூடை ரேஷன் அரிசி, 18 மூடை துவரம் பருப்பு பறிமுதல்; 2 பேர் கைது


இளையான்குடி அருகே 41 மூடை ரேஷன் அரிசி, 18 மூடை துவரம் பருப்பு பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே குடிமை பொருள் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 41 மூடை ரேஷன் அரிசி, 18 மூடை துவரம்பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடி அருகே குடிமை பொருள் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 41 மூடை ரேஷன் அரிசி, 18 மூடை துவரம்பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது.

அதிரடி சோதனை

இளையான்குடி அருேக உள்ள புதூரில் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் பொருட்களை கடத்துவதாக சிவகங்கை குடிமை பொருள் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் குடிமைப் பொருள் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் புதூரை சேர்ந்த நாகூர்கனி (வயது 63) என்பவருக்கு சொந்தமான குடோனில் சோதனை செய்த போது சட்டவிரோதமாக 28 மூடைகள் ரேஷன் அரிசியும், 18 மூடை துவரம் பருப்பு ஆகியவற்றை பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. இதே போல சோதுகுடி கிராமத்தைச் சேர்ந்த பசீர்கான் (73) என்பவரது வீட்டில் 13 மூடை ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

2 பேர் கைது

2 இடங்களிலும் 41 மூடை ரேஷன் அரிசியும், 18 மூடை துவரம் பருப்பு ஆகியவற்றுடன் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனத்தையும் பறிமுதல் செய்து இளையான்குடி நுகர்பொருள் வாணிபக் குடோனில் ஒப்படைத்தனர். நாகூர் கனி மற்றும் பசீர்கான் ஆகிய 2 பேர் மீதும் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.


Next Story