

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம்-பரமக்குடி சாலையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சாவை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 423 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், கஞ்சாவை கடத்திய புதுக்கோட்டையைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.