428 பேர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதினர்


428 பேர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதினர்
x

மயிலாடுதுறையில் 428 பேர் டி.என்.பி.எஸ்.சி தேர்வை எழுதினர். 388 பேர் தேர்வு எழுத வரவில்லை.

மயிலாடுதுறை


மயிலாடுதுறையில் 428 பேர் டி.என்.பி.எஸ்.சி தேர்வை எழுதினர். 388 பேர் தேர்வு எழுத வரவில்லை.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு

இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பணிக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 7பி, குரூப் 8 ஆகிய தேர்வுகள் நேற்று மற்றும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி, தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த மையத்தில் தேர்வு நடந்தது.

428 பேர் எழுதினர்

மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத மொத்தம் 816 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 428 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 388 பேர் தேர்வு எழுத வரவில்லை. தாமதமாக தேர்வு எழுத வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வினை அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளருமான தாமரைச்செல்வன் தலைமையில் டி.என்.பி.எஸ்.சி. பிரிவு அலுவலர் இளவரசு, உதவி பிரிவு அலுவலர் கண்ணன் ஆகியோர் கண்காணித்தனர்.

ஆய்வு

இந்த மையத்தில் நடந்த தேர்வை டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் கே.அருள்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story