அரிசி, பருப்பு, கோதுமைக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத வரியை நீக்க வேண்டும்


அரிசி, பருப்பு, கோதுமைக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத வரியை நீக்க வேண்டும்
x

அரிசி, பருப்பு, கோதுமைக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத வரியை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கரூர்

கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் 30-வது மகாசபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் ராஜூ தலைமை தாங்கினார். செயலாளர் கே.எஸ்.வெங்கட்ராமன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்வம் வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். இக்கூட்டத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை நீக்க மத்திய அரசை கேட்டுக்கொள்வது. குப்பை வரியை சென்னை உள்பட சில மாவட்டங்களில் தள்ளுபடி செய்தார்கள். கரூர் மாவட்டத்திலும் குப்பை வரியை ரத்து செய்ய கேட்டுக்கொள்வது. மத்திய அரசு நூல் விலையை குறைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் சோதனை செய்யும்போது முறையான சோதனை செய்ய வேண்டும் மற்றும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் கடுமையான சரத்துக்களை நீக்கி ஒற்றை உரிமம் அமல்படுத்துவது பற்றி மத்திய அரசை கேட்டுக்கொள்வது. பெட்ரோல், டீசல் வரியை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை கேட்டு கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Related Tags :
Next Story