50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது


50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
x

ராஜபாளையம் அருகே 50 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததுடன் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

தளவாய்புரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் லவகுசன் மற்றும் போலீசார் சந்தை பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது செட்டியார்பட்டி பகுதியை சேர்ந்த பார்வதிநாதன் என்பவரது மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் அருகே உள்ள இந்திரா நகர் தெற்கு தெருவை சேர்ந்த குருமூர்த்தி மற்றும் விஸ்வா ஆகியோர் மூலம் புகையிலை பொருட்களை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 50 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் பார்வதிநாதன் (வயது 50), குருமூர்த்தி (வயது 21) ஆகிய 2 ேபரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய விஸ்வாவை தேடி வருகின்றனர்.



Related Tags :
Next Story