கள்ளச்சாராய உயிரிழப்பு எதிரொலி.. 50 மதுபான பார்களுக்கு சீல்..அதிரடி காட்டிய காவல்துறை


கள்ளச்சாராய உயிரிழப்பு எதிரொலி.. 50 மதுபான பார்களுக்கு சீல்..அதிரடி காட்டிய காவல்துறை
x

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 50 மதுபான பார்களை சீல் வைக்குமாறு காவல் துறையினர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்த நிலையில், மாவட்டம் முழுவதும் 50 மதுபான பார்களை சீல் வைக்குமாறு காவல் துறையினர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளச் சாராயம் குடித்து 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாயும், சிகிச்சை பெறுபவர்க்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் முன்னிலையில் சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 50 மதுபான பார்களை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்பேரில், காவல் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


Next Story