தமிழகத்தில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் இதுவரை 57 செல்போன்கள் பறிமுதல்


தமிழகத்தில் நடைபெற்ற  என்ஐஏ சோதனையில் இதுவரை 57 செல்போன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 July 2022 11:30 AM GMT (Updated: 20 July 2022 12:22 PM GMT)

தமிழகத்தில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் செல்போன்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் சென்னை உள்பட 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலம் விழிஞம் துறைமுகம் அருகே 300 கிலோ ஹெராயின், 5 ஏகே 47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, சென்னையில் மண்ணடி, குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், கேம்ப் ரோடு, கிழக்கு கடற்கரை சாலை என மொத்தம் 9 இடங்களிலும், திருச்சியில் 11 இடங்களிலும், திருப்பத்தூரில் ஒரு இடத்திலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் இதுவரை 57 செல்போன்கள், 68 சிம் கார்டுகள், 2 பென் ட்ரைவ், 2 லேப்டாப் மற்றும் 8 வைஃபை மோடம்கள் இலங்கைக்கான பாஸ்போர்ட் உள்ளிவட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story