சென்னையில் வருகிற 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் 60 சிறப்பு மாநகர பஸ் சேவை


சென்னையில் வருகிற 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் 60 சிறப்பு மாநகர பஸ் சேவை
x

தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் வெளியூரில் வசிப்பவர்கள் தீபாவளி பண்டிகையை, சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக தமிழக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்தது. அதன்படி நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயங்கத் தொடங்கின. சென்னையை பொருத்தவரை பிற்பகல் முதலே போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வழக்கமாக தினமும் இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சிறப்பு பஸ்கள் மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே. நகர் மாநகர பஸ் நிலையம், தாம்பரம் அண்ணா பஸ் நிலைய நிறுத்தம், பூந்தமல்லி விரைவுச்சாலை பஸ் நிறுத்தம் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. அரசு பஸ்களின் கட்டணம் குறைவாக இருப்பதால் பயணிக்க பலரும் முன் வருகிறார்கள்.

இந்த நிலையில், சென்னையில் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மாலை மற்றும் இரவு நேரங்களில் 60 மாநகர சிறப்பு பேருந்துகள் இயக்க சென்னை மாநகர போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. தீபாவளி முடிந்து பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகளில் சொகுசு பேருந்து கட்டணம் வசூலிக்க போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் உரிய வழித்தட பெயர் பலகை சரிவரப் பொருத்தியும், பயண சீட்டுகள் 100% அதிகப்படுத்தியும் இயக்க போக்குவரத்துத்துறை அறிவுறுத்தி உள்ளது.


Next Story