சென்டிரல் ரெயில் நிலையத்தில் 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சென்டிரல் ரெயில் நிலையத்தில் 600 கிலோ ரேஷன் அரிசியை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
சென்டிரல் ரெயில் நிலையத்தில் 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரெயில் நிலையத்தின் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆய்வு செய்து வந்தனர். அப்போது, ரெயில் நிலையத்தின் ஒரு பகுதியில் மூட்டைகள் குவிக்கப்பட்டு இருந்தன. அதை, ஒருவர் பாதுகாத்து கொண்டிருந்தார்.

இதையடுத்து, ரெயில்வே பாதுகாப்பு படையினர் சந்கேதத்தின் பேரில் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். பின்னர், மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில், ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, 30 மூட்டைகளில் இருந்த 600 கிலோ அரிசியை பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்தனர். விசாரணையில், அவர் திருவள்ளூரை சேர்ந்த கோகுல் (வயது 49) என தெரியவந்தது. இவர், யாரிடம் ரேஷன் அரிசியை வாங்கினார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com