வடசென்னையில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வடசென்னையில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!
Published on

திருவள்ளூர்,

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும் இரண்டாவது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2ஆவது நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்ப்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் யூனிட்டில் 2-வது அலகில் ஏற்பட்ட கொதிக்கலன் குழாய் கசிவால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com