மது விற்ற பெண் உள்பட 7 பேர் கைது
மது விற்ற பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
செம்பட்டிவிடுதி பகுதியில் மது விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் ஆலங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செம்பட்டிவிடுதி அருகே மதுவிற்ற இச்சடி அண்ணா நகரை சேர்ந்த மதியழகன் (வயது 46), கீழப்பட்டி மாங்கோட்டையை சேர்ந்த மூர்த்தி மகன் சந்திரசேகரன் (33), கறம்பக்குடி அருகே பட்டத்திக்காடு பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் வீரய்யா (32), மேல நெம்மகோட்டையை சேர்ந்த நாராயணன் மகன் விஜயகுமார் (34), கறம்பக்குடி தாலுகா வாண்டான்விடுதிய சேர்ந்த செல்வராசு மகன் அழகர் (36) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 134 மது பாட்டில்கள், ரூ.21,280, 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து செம்பட்டிவிடுதி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் ராஜாளிபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மதுவிற்ற ராஜாளிப்பட்டி பகுதியை சேர்ந்த மணி (63), முத்துலட்சுமி (49) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 34 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.