ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு

ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் 8 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.
ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு
Published on

ஆசிரியை

திருச்சி மாவட்டம், சமயபுரம் காருண்யா நகரை சேர்ந்தவர் சமதர்மதாஸ். இவரது மனைவி ஜெயா(வயது 59). ஆசிரியையான இவர் நேற்று சமயபுரம் நால்ரோடு பஸ் நிறுத்தத்தில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி மாம்பழச்சாலைக்கு வந்தார்.

மாம்பழச்சாலையில் அவர் பஸ்சில் இருந்து இறங்கியபோது, அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் சங்கிலி மாயமாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பஸ்சில் வந்தபோது யாரோ மர்ம நபர் அந்த சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இது குறித்து ஜெயா, ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இந்திராகாந்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com